யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

யாழ் போதான வைத்திசாலை பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..

அவசரப்பட்டு பதட்டத்தோடு உண்மையை உறுதி படுத்தாமல் செய்திகளை வெளியிடுகினறீர்கள் பரிமாறுகின்றீரகள். எல்லோரையும் பதட்டமான நிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள்.

அரியாலைப் பகுதியில் பிரார்த்தனை நடத்திய மதகுருவுக்கு தொற்று இருப்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து சேரவில்லை.

அவருக்கு தொற்று இருந்தாலும் இங்கு பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் இங்குள்ள ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு சிலரும் எந்தவிதமான நோய் அறிகுறியும் காணப்படாமல் இருக்கலாம்.

மத குருவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரோடு நேரடியாக தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களது வீட்டில் இரண்டு கிழமைகள் தனியாக இருந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறானவர்களினள் சுவாச வியாதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரோடு நேரடி தொடர்பு கொண்ட ஒருவருக்கு சுவாச மற்றும் அதனோடு தொடர்புடைய வியாதிகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொற்று இருக்கின்றதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் பல்வேறு நோய்களினால் வருகின்ற சுவாச வியாதிகள் ஏனைய வியாதிகளுக்கு பொதுமக்கள் வைத்தியசாலைக்கு செல்லாத நிலை ஏற்பட்டு அசௌகரியமான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

0/Post a Comment/Comments

Previous Post Next Post