ஊரடங்கு நடைமுறையால் முடங்கிய வடக்கு - பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - Yarl Voice ஊரடங்கு நடைமுறையால் முடங்கிய வடக்கு - பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - Yarl Voice

ஊரடங்கு நடைமுறையால் முடங்கிய வடக்கு - பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வடக்கு மாகாணம் முற்றாக முடங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகை உலக்கி வருகின்ற கொரோனோ தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு 60 மணித்தியாலங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என வடக்கு மாகாணம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது. பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஆயினும் அவசர அத்தியாவசிய தேவைகள் கருதி ஒரிரு இடங்கில் பொது மக்கள் சென்று வந்தததைக் காணக் கூடியதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் அனைத்தும் முடங்கி இருக்கின்றது.

இதே வேளை பொலிஸார் இரானுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் இறக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post