யாழில் தனிமைப்படுத்தப்பட்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தப்பட்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தப்பட்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கத்திற்கு  உள்ளானவரின் கிராமமான தாவடி கிராமம் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் சதோசா சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இன்று வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ் மாவட்டத்தில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவரது கிராமமான தாவடி கிராமம் பாதுகாப்புத் தரப்பினரும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 300 குடும்பங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு சதோசா யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியன இணைந்து இன்று வலன்கி வைத்துள்ளனர்

அத்தியாவசிய பொருட்களான கோதுமை அரிசி பருப்பு டின் மீன் போன்ற பொருட்கள் இன்று மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post