தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து சுமந்திரன் விளக்கம் - Yarl Voice தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து சுமந்திரன் விளக்கம் - Yarl Voice

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து சுமந்திரன் விளக்கம்

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைப்பில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்ற கருத்துரையாடலிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான எனது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் வித்தியதரனால் என்னிடம் கேள்வி எழுப்பபட்டுள்ளது. இது தொடர்பில் நான் பல தடவைகள் சொல்லியிருக்கிறென். அதாவது மிக விளக்கமாக சாவகச்சேரியில் நடந்த ரவிராஐ; நினைவுப் பேருரையில் சொல்லியிருந்தேன். ஆனால் மீளவும் அதைப்பற்றி கேட்டதால் சொல்லுகிறென்.

ஆயுதப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகப் போராடவில்லை. தங்களது உயிர் பொனாலும் பரவாயில்லை. எங்களுடைய மக்களுக்கு உயிர் வேண்டும் என்று போராடியவர்கள். அந்த நிலைப்பாட்டை எந்தக் காலத்திலும் நாங்கள் துச்சமாகக் கருத முடியாது. மக்களுக்காக தங்களது உயிரையே மாய்த்துக் கொள்வதற்காக போராட்டக் களத்திற்கு சென்றவனுடைய அந்த அர்ப்பணிப்பு எங்களாலே போற்றப்பட வேண்டிய ஒன்று. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.

ஆனால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது நடந்த சில விடயங்கள் சரித்திரத்திலே நாங்கள் பின்நோக்கிப் பார்க்கிற பொழுது இது சரியான முடிவா தவறான முடிவா நாங்கள் வித்தியாசமாகச் செய்திருக்கலாமா அல்லது அந்தக் காலத்தில் அரசியலில் இருந்தவர்கள் செய்தது சரியா தவறா என்கின்ற சுய பரிசொதனை அத்தியாவசியம். சுய பரிசொதனை இல்லாமல் நாங்கள் மன்னேற மடியாது. சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதைச் செய்யக் கூடாதென்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள தயாரில்லை.

இவ்வாறு முதலில் நான் பாரிய அர்ப்பணிப்பு என்றும் இப்ப சுய விமர்சனம் என்று எல்லாம் கூறியிரக்கிறென் தானே. அனால் இப்ப என்ன நடக்கும் என்றால் மேற்கூறிய எல்லாத்தையும் விட்டுவிட்டு கடைசியாக நான் கூறிய சுயவிமர்சனம் என்றதை மாத்திரமே ஊடகங்கள் பிரசுரிக்கப் போகின்றன.

ஆனால் முதல் சொன்னதை போடமாட்டார்கள். எந்தத் தருணத்திலும் நான் நிறைவாக விட்டது கிடையாது. ஆனால் அந்த ரிஸ்க்கையும் எடுத்துக் கொண்டு தான் நான் சொல்லுகிறேன். அது தான் என்னுஐடய நிலைப்பாடு. ஏன் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது என்றும் என்னிடம் தெளிவு இல்லை. இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன்.

நூங்கள் ஒற்றுஐமயாக முன்னெற வேண்டும் என்பது எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு. ஏன் ஒரே கட்சியாக இயங்க முடியாது என்ற பாரிய ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அப்படியான கேள்வி கேட்ட போது நான் பதில் சொல்லும் கோதே ஐனநாயக சூழலில் என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தேன். அத்தோடு ஆயுதப் போராட்ட காலத்திலேயே ஒரு இயக்கமாக இருக்கவில்லையே. ஆதைச் சொன்னதற்கு வந்த வினை.

நூங்கள் முன்னொக்கிப் போகிறதைக் கவனிக்க வேண்டும். இனினொரு தடவை எங்களது இளைஞர்கள் ஆயுதம் தூக்கக் கூடாதென்பதை நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அதைச் சொன்னதற்காக நடந்ததை செய்திருக்கக் கூடாதென்று நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த அனுபவத்தை வைத்தக் கொண்டு இனினொரு தடவை எங்களது இளைஞர்கள் ஆயுதம் தூக்கக் கூடாது.

அப்படியாயின் எப்படி நாங்கள் எங்கள் உரித்துக்களைப் பெறுவது எப்படியாக இந்த நாட்டில் சுயமரியாதையுடன் வாழ்வது எப்படியாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வது பேரினவாத சூழலில் நாங்கள் எப்படி முன்னெறுவது எப்படி ஒரு சமூகமாக .கலைகலாசாரங்களை பேனுவது என்ற கேள்வி எழும். ஆதைச் செய்வது ஒரு ஐனநாயக சூழலில் செய்பட தான் நடவடிக்கை எடுக்கிறொம்.

சர்வதேச சூழலிலும் இலங்கை அரசிற்கு பல நெருக்கடிகளைக் கொண்டு வரும் வகையில் சில விடயங்களை நாங்கள் கையாளுகிறொம். அதே நேரத்தில் சரியாககக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் குற்றவியல் நீதிமன்றில் கொண்டு சென்று நிறுத்தவில்லை என்று கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. எதைச் செய்ய முடியும். இந்தக் கருவியால் எதனை அடைய முடியும். இந்த நிலைமைகளுக்கு அமைய செயற்படுகிறொம். மக்கள் அந்தப் பொறுப்பை எங்களிடத்தே கொடுத்திருக்கிற பொழுது நாங்கள் தான் அந்த பொறுப்பாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

அந்தப் பொறுப்புக்கள் எவரெவருக்கு கொடுக்கவில்லையோ அவர்கள் வேண்டுமானாதைப் பேசலாம். பொறுப்பற்றுப் பேசலாம். அதைத் திறமையாகச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் எங்களிடத்தே அந்த பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிற வரைக்கும் எது சாத்தியமானது எப்படியாக ஒரு வழி திறக்கிறது என்பதை நிதானித்து தான் செயற்பட வேண்டும். சாதிக்க முடியுமோ இல்லையோ நேர்மையாக முயற்சி செய்தார்கள். இயலுமான எல்லாவற்றையும் செய்தார்கள் என்று மக்கள் கருதுவார்கள். அப்படியாக இந்த தடவையும் எங்களுடன் மக்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.0/Post a Comment/Comments

Previous Post Next Post