அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஊரடங்கில் அனுமதி - பதிவு செய்ய கோரிக்கை - Yarl Voice அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஊரடங்கில் அனுமதி - பதிவு செய்ய கோரிக்கை - Yarl Voice

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஊரடங்கில் அனுமதி - பதிவு செய்ய கோரிக்கை



கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை ஏற்றி வர ஊரடங்கு அனுமதிக்கு 7 லொறிஉரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாண பிரதேச செயலர் எஸ் சுதர்சன் தெரிவித்தார்

 நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுவதற்கு ஊரடங்கு பாஸ் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நேற்றைய தினத்தில் இருந்து யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக புதிய நடைமுறை ஒன்று பின்பற்றப்பட உள்ளதாக நேற்றையதினம் தீர்மானிக்கப்பட்டது.

 அதன்படி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவதற்கான ஊரடங்கு பாஸ் அனுமதிநேற்றிலிருந்து போலீஸ் நிலையங்களில் சென்று பெறாது யாழ்ப்பாண பிரதேச செயலரிடம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமிடத்து உரிய அனுமதி பெற்றுத் தரப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க நேற்றைய தினம் மட்டும் 7 லொறி உரிமையாளர்கள் ஊரடங்கு பாஸிற்கு விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post