தமிழினத்தை கருவறுக்கும் அரசின் சதியே வடகிழக்கில் கொரோனா முகாம்கள் - மணிவண்ணண் - Yarl Voice தமிழினத்தை கருவறுக்கும் அரசின் சதியே வடகிழக்கில் கொரோனா முகாம்கள் - மணிவண்ணண் - Yarl Voice

தமிழினத்தை கருவறுக்கும் அரசின் சதியே வடகிழக்கில் கொரோனா முகாம்கள் - மணிவண்ணண்

கொரோனோ பரிசோதனை முகாம்களை வடகிழக்கில் அமைத்து தமிழினத்தை கருவருக்கும் திட்டமிட்ட சதி வேலைகளையே அரசாங்கம் மேற்கொள்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் பரிசோதனை முகாம்களை வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..

கொரோனோ வைரஸ் பிரிசோதனை முகாம்களை வடகிழக்கில் அமைப்பதென்பது எங்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படாத விடயம். இலங்கத் தீவிலே எத்தனையோ இடங்கள் இருக்கின்ற நிலையில் அந்த இடங்களில் இந்த சிறப்பு முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்க முடியும்.

வடக்கு கிழக்கு என்பது கடந்த 30 ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டெழுகின்ற பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் அந்த முகாம்களை அமைப்பது பொருத்தமானதல்ல. இந்த இடங்களை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன? வேறு இடங்களில் ஏன்? இதனை அமைக்க முடியவில்லை என்ற கேள்விகள் எழுகிறது.

உலக வல்லரசுகளே கொரோனா தாக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கையில் முப்பது வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இந்த முகாம்களை அமைக்கின்ற போது எங்களுடைய மக்களால் இதை எதிர்கொள்கின்ற தீராணியோ அல்லது மனபலமோ இல்லை. இதனை அனைவரும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகைளினால் அவ்வாறு அமைக்க வேண்டாமென்பது தான் எங்கள் கோரிக்கையாகவும்; இருக்கின்றது.

இத்தகைய கொடிய நோயை எதிர்கொள்ளுகின்ற அல்லது அதிலிருந்த பாதுகாப்பு தேடுகின்ற அல்லது எந்த பண பலமோ உடல் ரீதியான ஆரோக்கிய பலமோ எங்களது மக்களிடம் இல்லை. நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம். இந்தச் சமூகத்தின் மத்தியில் வைரஸ் தொற்கு முகாம்களை அமைத்து அவர்களைக் கொண்டு வருவதென்பது மற்றுமொரு இனஅழிப்பை இந்த அரசாங்கம் செய்யத் தொடங்கியிருக்கின்றது என்பது எங்களுடைய கணிப்பாக இருக்கின்றது.

இதுவும்; ஒரு இனத்தை அழிக்கின்ற அல்லது பாரதூரமான நோய்களை எமது பிரதேசத்தில் பரப்புகின்ற திட்டமிட்ட செயலாகத் தான் நாங்கள் பார்க்கின்றறோம். உண்மையில் கொரேனோ வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். இதனைக்
கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பதிலும் மிக உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால் அதற்கான முகம்களை அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற பகுதிகள் பொது மக்களிடம் இருந்து அந்நியோன்pயப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்க வேண்டும். அவ்வாறான இடங்களில் முகாம்களை அமைக்கலாம்.

ஆனால் அதிகளவான மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் இந்த முகாம்களை ஏன் அரசாங்கம் நிறுவுகின்றது. அதிலும் நாட்டில் எத்தனையொ இடங்கள் இருக்கின்ற போதும் வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரீவு செய்திருப்பதன் நோக்கம் என்ன? இவ்வாறு முகாம்களை இங்கு அமைப்பதன் ஊடுhக தமிழ் மக்களை அழிக்கின்ற நடவடிக்கைகளை தான் அரசாங்கம் மேற்கொள்கிறதா?

இவ்வாறான தொற்று நோயாளர்களைக் கொண்டு வந்து அந்தப் பிரதேசத்தில் இவ்வாறான தொற்று நோயை ஏற்படுத்தவதென்பது எங்களுடைய இனத்தை மீண்டும் கறுவருக்கின்ற செலாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

இவ்வாறான செயலை நாங்கள் கண்டிக்கின்றோம். இவ்வாறான செயல்களை தனிமைப்படுத்தப்பதட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது எங்களுடை நிலைப்பாடாக இருக்கிறது என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post