தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான பேச்சு என்பது கதிரைகளுக்கானது - வரதராஐப் பெருமாள் - Yarl Voice தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான பேச்சு என்பது கதிரைகளுக்கானது - வரதராஐப் பெருமாள் - Yarl Voice

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான பேச்சு என்பது கதிரைகளுக்கானது - வரதராஐப் பெருமாள்

பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என வடக்கு கிழக்கு இணைந்து மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது...

பாராளுமன்றத் தேர்தல் பெரிய மாற்றத்தைக் கொடுக்குமென்று நான் கருதவில்லை. அரசியல் கட்சிகள் புதிதாக உருவாகியிருக்கலாம். புதிய கூட்டுக்கள் எல்லாம் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுத்தக் கூடிய நிலைமைக்கு ஒரு வாய்ப்பு காணப்படவில்லை.

ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை கிடைத்த ஐந்து வருசமும் பெரிய பாக்கியமாக கிடைத்தது. அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு விளங்கியிருக்கும் அல்லது எத்தனை பேர் அதனைப் புரிந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியிவில்லை.

ஆனால் அந்தச் சந்தர்பத்தை முழுவதுமாக தவறவிட்டனர். அதை என்ப்படி தவறவிட்டனர் என்றே சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் திட்டமிட்டு தெரிந்தே தவறவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளளது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றும் இனி அண்மைக்காலத்தில் கிடைக்கப் போவதில்லை.

இப்ப இதற்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு வருகின்ற விக்கினெஸ்வரன் அணியைப் பொறுத்தவரையிலும் வெறும் கற்பனை சுலோகங்களை வைத்திருக்கிறதே ஒழிய அது எப்படி தமிழருடைய அரசியல் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முன்னெற்றத்தை ஏற்படுத்தப் போகிறதென்றோ தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறதென்றோ அவர்களிடமும் எந்தவிதமான திட்டமும் இல்லை. அதற்கான யதார்த்த அனுகுமுறையும் அவர்களிடம் கிடையாது.

ஆகவே பெரியளவில் மாற்றமேதும் ஏற்படுமென்று கருதவில்லை. அந்த அடிப்படையில் தேர்தல் என்பதில் இன்னுமொருமுறை தமிழர்கள் தங்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு பகுதியிரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்ற வேலையாக இது அமையும்.
தேசியக் கட்சிகள் என்கின்ற போது சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அவர்களது வாக்குகளை நம்ப்pயிருக்கின்ற கட்சிகளைத் தான் தேசிய கட்சிகள் என்று சொல்லாம். இன்றைக்கு இலங்கை முழுவதும் தழுவிய கட்சியாகவே அவர்கள் அனைத்து இடங்களிலம் போட்டியிடுகின்றனர்.

எனவே தேசிய கட்சிகள் என்று சொல்கின்ற அர்த்தம் இன்றைக்கு குறைந்து குறைந்த வந்தவிட்டது. நாங்கள் அப்படி தென்னிலங்கையை மையமாக வைத்து சிங்கள மக்களின் வாக்குகளை அதிகளவில் கொண்டுள்ள கட்சிகளோடு ஒரு அணியாகப் போவதற்கான எந்த சிந்தனையும் எங்களுக்கு கிடையாது.

அது மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கக் கூடிய பிரதானமான கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அலையை கிளப்பி அல்லது தமிழருக்கு விரோதமான எண்ணங்களை கிளப்பி வாக்குத் தேடுகின்ற போட்டிகள் தான் அங்கே முனைப்படைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தென்னிலங்கை கட்சிகளுடன் அணி சேருவதற்கான வாய்ப்பு எங்களுக்கு எந்தவகையிலும் இல்லை.

ஆகையினர்;ல் தமிழர்களுக்கிடையிலான ஐக்கிய முன்னணி தொடர்பில் முடியாத கட்டத்திற்கோ அல்லது விரக்தியடைந்த நிலைக்கோ நாங்கள் இன்னமும் வரவில்லை. அந்த முயற்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த முயற்சிகள் சாத்தியமாகாத பொழுது நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்பதையும் அறிவித்திருக்கிறோம். அந்த முயற்சிகள் சாத்தியமாகுமா இல்லை என்பதற்கப்பால் சாத்தியமாக வேண்டுமென்ற விருப்பம் எங்களிடம் இருக்கிறது.

தமிழ் தரப்பு ஒற்றுமை குறித்து பேசப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பு தமது வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானத்து ஆசனங்களுக்கான பங்கீடுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். அதே போல விக்கினேஸ்வரனின் கூட்டணியைப் பொறுத்தவரையில் அவர்கள் எங்களுடன் பேசுவதற்குத் தயாரில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்தும் விட்டார்கள்.

ஆனபடியால் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் ஓரணியாக வர வேண்டும் என்று ஒரு பகுதியினர் மத்தியில் பொதுவான விருப்பங்கள் இருந்தாலும் அது சரியான அரசியல் புரிதலில் இருந்து அதைக் குறித்து சிந்திக்கப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக இந்த ஐனநாயகத்தில் பல கட்சிகள் இருக்கும்.

மக்கள் தான் இதிலே தங்களுடைய பிரதிநிதிகள் யார் தங்களுக்கு சரியாக தங்களுடைய வாழ்க்கையிலே தங்களுடைய அரசியல் நிலைமைகளிலே பொருளாதார நிலைமைகளிலே முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சிகள் யார் நபர்கள் யார் எனத் தீர்மானித்து வாக்களிக்க வேண்டுமே தவிர இதிலே கட்சிகள் ஓரணியில் வரும் அல்லது வர வேண்டுமென்று எந்தவொரு கட்சிக்காரரும் சொல்வது அர்த்தமுடையதொன்றாக இல்லை.

ஆகவே எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலான அளவு கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. ஆனால் இதில் அவர் துரோகி இவர் தியாகி நான் தூய்மையானவன் மற்றைவர் தூய்மையில்லாதவர் என்ற வார்த்தைப் பிரயோகங்களே முதலில் ஒற்றுமைக்கு விரோதமான விசயங்கள். ஆனபடியினால் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் இங்கு ஆதிக்கம் செலத்துகிறது.

இங்கே அவரவர் தான் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக வரலாம் என்பது தான் அவர்களிடம் காணப்படுகின்ற நோக்கமாக இருக்கிறது. ஆனபடியால் யாரும் அப்படி பேச வந்தர்ல் நாம் பேச தயார். தமிழர்களுடைய விடயம் குறித்து தேர்தலுக்கும் முன்னும் தேர்தலுக்குப் பின்னும் ஒரு அரங்கில் இருந்து பேசுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் மட்டும் அனைத்து அணிகளும் ஓரணியாக ஈடுபட காரணமாக இருக்க வேண்டுமென்றில்லை. தேர்தல் காலத்தில் இனி அது சாத்தியமாகுமென்று நான் நினைக்கவில்லை என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post