விக்கினேஸ்வரன் அணியில் தேர்தலில் களமிறங்கும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் - Yarl Voice விக்கினேஸ்வரன் அணியில் தேர்தலில் களமிறங்கும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் - Yarl Voice

விக்கினேஸ்வரன் அணியில் தேர்தலில் களமிறங்கும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் ரூபன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் களமிறங்குகிறார்.

இது தொடர்பாக கூட்டணியின் ஊடகப் பிரீவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது..
'
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ரூபன் களம் இறங்குகின்றார்

.நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் இராணுவத்தினரிடம் ரூபன் சரண் அடைந்திருந்தார்.

1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைந்துகொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் யுத்தத்தின் போது  தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி வாமதேவன் சுசாந்தன் என்பவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறக்கியுள்ளார்கள். இவருக்கான ஆசனம் பங்குதாரக் கட்சியில் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றபின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதேவேளை வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஜெஸ்மின் கிளெறிஸ் பரமநாதன் என்பவரை விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுள்ளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்துக்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திரா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post