ஊரடங்குச் சட்ட நடைமுறையால் இன்று முடங்கிய யாழ்ப்பாணம் - களத்தில் பொலிஸார் - Yarl Voice ஊரடங்குச் சட்ட நடைமுறையால் இன்று முடங்கிய யாழ்ப்பாணம் - களத்தில் பொலிஸார் - Yarl Voice

ஊரடங்குச் சட்ட நடைமுறையால் இன்று முடங்கிய யாழ்ப்பாணம் - களத்தில் பொலிஸார்

ஊடரடங்குச் சட்ட நடைமுறையால் இன்று யாழ்ப்பாணம் முடங்கியது.

நாடுபூராகவும் நேற்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வர்த்தக நிலையங்கள் வணிக ஸ்தாபனங்கள் வங்கிககள் என அனைத்தும் பூட்டப்பட்டு பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர்.

இதனால் யாழ்ப்பாண நகரம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களும் மைதியாக வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

ஆயினுமு; ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் யாழ் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளிலம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே வேளை அத்தியாவசிய தேவைகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post