குறித்த நபருடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஜந்து சந்தி மற்றும் நாவாந்துறைப் பகுதியினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பினைச் சேர்ந்த 64 வயதான நபர் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்திருந்தார். குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.
இங்கு வந்த அவர் 8 ஆம் திகதி தனது சகோதரனின் பிள்ளையின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மறுநாள் 9 ஆம் திகதி மீண்டும் நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் உயிழிழந்ததை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றும் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 130 பேருடைய பெயர் விபரங்களை திரட்டப்பட்டு அவர்களை தேடும் பணிகள் நேற்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி ஜந்து சந்தி மற்றும் நாவாந்துறைப் பகுதி பொலிஸ் இராணுவம் மற்றும் சுகாதாரத்துறையினரால் முற்றுகையிடப்பட்டது. அங்கு கொரோனாவால் திருமணம் நடந்த பகுதி மனமகன் மற்றும் மனமகள் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. மேலும் குறித்த நபர் தங்கியிருந்த இடமும் முற்றுகையிடப்பட்டன.
குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த நபருடன் தொடர்புபட்ட 130 நபர்களுடைய பெயர் விபரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையில் ஜே.86 கிரம சேவகர் பிரிவில் 3 குடும்பங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான உணவுகள் நேற்று வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கான உலர் உணவுகளும் வழங்கப்பட்டன. மேலும் அவருடன் தொடர:புபட்டதாக மேலும் பலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment