கொரோனா தாக்கத்தால் இரு வாரங்கள் மூடப்பட்டது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் - Yarl Voice கொரோனா தாக்கத்தால் இரு வாரங்கள் மூடப்பட்டது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் - Yarl Voice

கொரோனா தாக்கத்தால் இரு வாரங்கள் மூடப்பட்டது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்


கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ]

அந்த வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மையினால் பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் இருவாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை  அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post