அறநெறிப் பாடசாலைகளுக்கான வடக்கு மாகாண செயற்திட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice அறநெறிப் பாடசாலைகளுக்கான வடக்கு மாகாண செயற்திட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice

அறநெறிப் பாடசாலைகளுக்கான வடக்கு மாகாண செயற்திட்டம் யாழில் ஆரம்பம்
அறநெறிப் பாடசாலை  ஆசிரியர்களுக்குப்  பிரத்தியோகமான அடையாள அட்டை வழங்குதல் ஆலயங்களுக்கான நிதி உதவி வழங்குதல்  உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்திற்கான  ஆரம்பநிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜயாதிபதி கோட்டாபய ராஜபக்சவினுடைய 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' எனும் கொள்கைக்கு அமைலாக  புத்தசாசன கலாசாரம் மற்றும் மத  அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 'சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்' எனும்  நோக்கோடு அறறெறிப் பாடசாலைகளினுடைய அதீத வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுஇ பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமயஇ கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.

அந்த வகையில் இந்து சமய அறநெறிப் பாடாலைகளில்  கற்பிக்கும் ஆசிரியர்களுடைய வாண்மைவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் தம் சேவை மனப்பாங்கைப் பாராட்டிப் பேணும் தனித்துவமான செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்களை மேம்படுத்து முகமாக  அவை தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கிய 'தகவற் தளம்  ஒன்றினை உருவாக்குதல் மற்றும் அறநெறிப் பாடசாலை  ஆசிரியர்களுக்குப்  பிரத்தியோகமான அடையாள அட்டை வழங்குதல் முதலான செயற்பாடுகளைஉள்ளடக்கி வடக்கு மாகாணத்திற்கான  ஆரம்பநிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு புத்தசாசனம்இ கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகா அமரசிங்க வடக்கு மாகாண ஆளுரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post