சிறிலங்காவின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice சிறிலங்காவின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice

சிறிலங்காவின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் நீதித்துறையூடாகவோ அல்லது அதன் உள்கப் பொறிமுறைகளினூடாகவோ எதனையும் அடைய முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யhழ் திருநெல்வேலியிலுள்ள தமது கட்சி அலுவலகமொன்றில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். அச் சந்திப்பின் போது  கருத்து வெளியிலையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறிலங்கா நீதிமன்றத்திலேயே குற்றவாளியாக இணங்காணப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்ட இரானுவ அதிகாரிக்கு ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச தன்னுடைய நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கின்றதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது.

இவ்வாறான காரணங்களினால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்ற விடயம் ஒருபோதும் இலங்கைக்குள் அல்லது இலங்கைக்குள் இருக்கின்ற பொறிமுறைகளுக்கு ஊடாக பெற்றுக் கொள்ள முடியாது என 2012 ஆம் ஆண்டு முதல் சொல்லி வருகின்றோம். அதற்காகவே சர்வதேச ரிதுpயான விசாரணை ஒன்று தேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டுமென்றும் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இவ்வாhறக எங்களது நிலைப்பாட்டை நாங்கள் கடந்த பத்து வருடங்களாக் விலயுறுத்தி வருகின்ற நிலையில் எங்கள் கருத்தை நிராகரித்த தரப்புக்கள் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களாலே தெரீவு செய்யப்பட்ட தமிழ்த் தரப்புக்காக இருக்கின்றவர்கள் சிறிலங்கா நீதிதுறை நம்பத்தன்மை உடையது என்றும் அதில் அரசியல் தலையீடு இல்லாவிட்டால் பிரச்சனை இல்லை என்றும் இலங்கையின் பொறிமுறைகளுக்கு ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து வந்தனர்.

ஆக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே கடந்த பத்து வருசமாக பரவலாக இத்தகைய பிரச்சாரத்தையே செய்து வருகின்றனர். ஆனால் இன்றைக்கு இந்த இரர்னுவ அதிகாரி சுனில் ரட்னாயனக்க விடுவிக்கப்பட்டிருக்கின்றமை சிறிலங்காவின் நீதித்துறை எந்தவளவிற்குச் செயற்படுகின்றதென்பதற்கு எடுத்தக்காட்டாகும்.

இன்றைக்கு சிறிலங்காவின் சொந்த நிதிமன்றத்தாலே குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்கின்ற அளவிற்கு இலங்கையின் கட்டமைப்புக்கள் இடம் கொடக்கிறதைப் பார்க்கையில் 2012 ஆம் ஆண்டு முதல் நாங்கள் கூறி வருகின்ற விடயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே சிறிலங்காவின் நீதித்துறையினூடாகவோ அல்லது அதன் உள்ளகப் பொறிமுறைகிளனூடாகவோ நிதிதுறையில் எதுவுமே சாதிக்க முடியாது.
ஏனெனில் சிறிலங்காவின் அந்த நீதித்துறை என்பது சிங்கள பெரினவாத சிந்தனை கொண்டதாகவே இருக்கின்றது.  அது மற்றத் தரப்புக்களை எப்பயுமே எதிரிகளாகவே பார்த்து தான் செயற்படுகிறது. ஆகையினால் அது சிங்கள பேரினவாத கட்டமைப்பின் நிலைப்பாட்டையே எப்போதும் பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஆகவே இன்றைக்கு ஐனாதிபதி கோட்டபாய எடுத்துள்ள நடவடிக்கையானது ஐனாதிபதி கோட்டபாயவின் தனிப்பட்ட நடவடிக்கையாகவே ஒரு சிலர் சொல்லுகின்றனர். அது மாத்திரமல்லாமல் அவர் தான் பிரச்சனை என்றும் சொல்லப் பார்க்கின்றனர். ஆனால் இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. இங்குள்ள சிங்கள பேரினவாத கட்டமைப்பு தான் பிரச்சனை. ஆந்தக் கட்டமைப்பின் ஆட்சி பீடத்திற்கு வருகின்ற தரப்புக்கள் அந்தக் கட்டமை பிரதிபலிப்பதாகவே செயற்படுபவர்களாகவே இருப்பார்கள்.

குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குளால் வந்த முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட அந்தக் கட்டமைப்பை பிரதிபலிப்பதாகவே தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அதனடிப்படையிலையே குற்றவாளியாக இருந்த ஞர்னசாரதேரரை விடுதலை செய்திருந்தார். இது தான் காலங்காலமாக சிறிலங்காவில் நடந்து வருகின்றது.

ஆகவே பேரினவாத கட்டமைப்புக்கள் சிறிலங்கா ஊறியிருக்கின்ற தென்பதை இது தெளிவாக எடுத்தக்காட்டகிறது.  இங்கு ஒரு போதும் நடுநிலை வகிக்கவும் முடியாது. நடுநிலையுடன் தீர்மானம் எடுக்கவும் முடியாது. ஆகவே அவ்வாறு எடுக்கப்படுகின்ற முடிவுகள் அல்லது தீர்மானங்கள் என்பது வெறுமனெ .தனிநபர் முடிவு சார்ந்தது அல்ல. அது கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை தான்

தமிழ் மக்களின் வாக்குளால் வந்தவர் கூட இததைத் தான் செய்து தன்னையும் சிங்கள பௌத்த பேரினவாதியாக தன்னை நிரூபித்திருந்தார். ஆக சிங்கள பௌத்த பேரினவாத தன்மையின் வெளிப்பாடு தான் இவர்களது செயற்பாடகளாக அமைகின்றன. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் சார்ந்ததாகவும் அதன் கட்டமைப்புக்களை வெளிப்படுத்துவதுமாகவே இருந்து வருகிறது.

அந்தக் கட்டமைப்பிற்கு எதிராகச் செயற்படுகின்ற தரப்புக்களை எதிராகப் பார்த்து செயற்படுகிற நிலை தான் இங்கு காணப்படுகிறது. இந்த உண்மைகளை உலத்திற்குச் சொல்ல வேண்டும். ஆனால் இந்த உண்மைகளை உலகத்திற்குச் சொல்லாமல் தமிழ் மக்களால் தெரீவு செய்யப்பட்ட தரப்புக்களே மறைத்து வந்தன.

குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு உலகம் தனது பார்வையை இலங்கையை நோக்கி செலுத்தியது முதல் இன்றை வரைக்கும் உள்ளக விசாரணை செய்யலாம் என்றும் நூறு பக்க அறிக்கையுடன் சர்வதேச விசாரணை முடிவந்துவிட்டது என்று சொல்கின்றவர்களாகவே இந்தத் தரப்புக்கள் இருக்கின்றன. ஆகவே இதற்கெல்லாம் இவர்களும் சேர்ந்து தான் பொறுப்பெடுக்க வேண்டும்.

அதிலும் கடந்த பத்து வருடமாக பிழையான விடயத்தை நியாயப்படுத்தி உலகத்தை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு அவர்களின் பிரச்hரம் இருந்தது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் கடந்த 2012 ஆம் ஆண்டு சொன்னதிலிருந்து அதனைச் செய்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இன்று இலங்கையில் எவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் அதற்கு மாறான நடவடிக்கைi எடுத்திருக்க முடியாது.

ஆக மொத்தத்தில் போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சி பீடத்திற்கு ஏற்றி அந்தப் போர்க்குற்றவாளிகளையே காப்பாற்ற வைத்ததும் இந்தத் தரப்புக்கள் தான். ஆனால் இன்றைக்கு தேர்தல் ஆரம்பித்திருக்கின்ற காலம் என்பதால் பல விதமான கருத்தக்களை அவர்களும் சொல்வார்கள்.

அதிலும் இன்றைக்கு தாங்கள் ஏதோ திருந்தியிருப்பதாக மக்கள் மத்தியில் பல கருத்தக்களை சொல்ல முயலுவார்கள். ஆகவே அப்படியாக இன்று அவர்கள் சொல்கின்ற கருத்துக்களை மாத்திரம் பார்த்து மக்கள் முடிவெடுக்க கூடாது. கடந்த பத்து வருசமாக சொன்னதைப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும்.

இவ்வளவு காலமும் இதற்கெல்லாமல் மாறாக நடந்தவர்கள் இன்று தங்களை திருத்திக் கொண்டு நல்லவர்களாக கருத்துக்களைக் கூறுவார்கள். அப்படியானவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாது சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம

0/Post a Comment/Comments

Previous Post Next Post