இந்தியாவிலிருந்து அண்மையில் வடக்கிற்கு வந்தவர்களிடம் அவசர கோரிக்கை - சுகாதார திணைக்களம் - Yarl Voice இந்தியாவிலிருந்து அண்மையில் வடக்கிற்கு வந்தவர்களிடம் அவசர கோரிக்கை - சுகாதார திணைக்களம் - Yarl Voice

இந்தியாவிலிருந்து அண்மையில் வடக்கிற்கு வந்தவர்களிடம் அவசர கோரிக்கை - சுகாதார திணைக்களம்

இந்தியாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவிதலொன்றை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

இலங்கையில் நேற்று (28.03.2020) புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் வந்தவர்களாவர்.

இதனால் இக்காலப்பகுதியில் இந்தியாவிலருந்து நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக அடையாளம் காணுமாறு இலங்கையின் மத்திய சுகாதார அமைச்சு அறிவுறத்தியுள்ளது.

எனவே கடந்த 14.03.2020 திகதி அல்லது அதன்பின் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக 021 221 7278 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக தம்மைத் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் காய்ச்சல் தொண்டை நோ மற்றும் வரட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post