ஊரடங்கிலும் தொழிலில் ஈடுபடும் வடபகுதி மீனவர்களுக்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல் - Yarl Voice ஊரடங்கிலும் தொழிலில் ஈடுபடும் வடபகுதி மீனவர்களுக்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல் - Yarl Voice

ஊரடங்கிலும் தொழிலில் ஈடுபடும் வடபகுதி மீனவர்களுக்கு கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்


ஊரடங்கு நேரத்திலும் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை சட்டவிரோதமான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டாமென இலங்கை கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் டி சில்வா வடபகுதி கடற்தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனாத் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து எமது நாட்டிற்கு கடல்வழியாக வருவதற்கு யாரும் முயலலாம். அதற்குத் தூணைபோகாமல் நாட்டின் மீது அக்கறை கொண்டு மிக மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

வட பகுதியில் அதிகளவான மக்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுவதனால் ஊரடங்கு வேளையிலும் மீன் பிடிப்பதற்கு நாம் அனுமதி வழங்கியுள்ளோம் ஆகவே அந்த சந்தர்ப்பத்தினை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் என்றும் வடபகுதுp கடற்தொழிலாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

.இதற்கமைய கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கான மீன்களை பிடித்து விட்டு கரையில் வந்து உங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும். இதைவிடுத்து  சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து வருபவர்களை அல்லது  இந்தியா செல்பவர்களை ஏற்றி இறக்கும் தொழிலில் நீங்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

ஆத்தகைய செயற்பாடுகள் மிகவுமு; ஆபத்தானவை. அது பலரும்க்கும் பல்வெறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகள் இருக்கின்றன. ஆகையினால் வடக்கு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

மேலும் தற்பொழுது கொரோனா தாக்கம் ஏனைய நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடற்படையும் விமானப்படையும் இணைந்து இலங்கையின் சகல கடற்கரையோரங்களிலும் கடலிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகிறது. ஏனெனில் வேறு நாடுகளில் இருந்து இங்கே கடல் வழியாகவும் தப்பி வருவார்கள். அதனைத் தடுக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில் தற்போது விமான நிலையங்கள் இங்கே மூடப்பட்டு காணப்படுகின்றது எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடல் வழியாக வேறு நாட்டவர்கள் சட்ட விரோதமாக  இங்கே வர முடியும் இதனால் வேறு நாட்டவர்கள் நமது மீனவர்களை பயன்படுத்தி இந்த நாட்டிற்குள் வர முயற்சிப்பார்கள் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை போகதீர்கள்.

நமது நாட்டை நாமே காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். இதற்காக விசேட நடவடிக்கை ஒன்றின் ஆரம்பிக்க உள்ளோம் குறிப்பாக வடபகுதி கடற்கரை ஓரங்களில் மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தவுள்ளோம் எனவே இதனைக் கருத்தில் கொண்டு வடபகுதி மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோருகின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post