கொரோனோ தொற்று விசேட பிரிவினருக்கு பாதுகாப்பு அங்கிகள் தேவை - பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice கொரோனோ தொற்று விசேட பிரிவினருக்கு பாதுகாப்பு அங்கிகள் தேவை - பணிப்பாளர் கோரிக்கை - Yarl Voice

கொரோனோ தொற்று விசேட பிரிவினருக்கு பாதுகாப்பு அங்கிகள் தேவை - பணிப்பாளர் கோரிக்கை

கொரோனா தொற்று விசேட பிரிவில் கடமையாற்றுகின்ற மருத்துவ குழுவினருக்கு பாதுகாப்பு அங்கிகளை சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

யுhழ் போதனா வைத்தியசாலையில் கொரோனோ தொற்று விசேட பிரிவொன்று உள்ளது. அதில் வைத்தியர் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவொன்று சேவையாற்றி வருகின்றது. இந்த கொரோனோ தொற்றின் இன்றைய நிலைமையில் கடமையாற்றி வருகின்ற விசேட பிரிவினருக்கு குறி
ப்பிட்டளவு பாதுகாப்பு அங்கிகள் தற்போது உள்ளது.

ஆகையினால் மேலும் பாதுகாப்பு அங்கிகள் தேவைப்படுவதால் சுகாதார அமைச்சிடம் கோரியிரக்கின்றொம். இதே நேரத்தில் கொரோனோ தொற்று தாக்கம் எதிர்காலத்தில் அதிகரிக்குமிடத்தே பாதுகாப்பு அங்கிககள் இன்னும் தேவைப்படும்.

ஆயினும் தற்போது எம்pமிடம் காணப்படுகின்ற கையிருப்புக்கள் இப்பொதிருக்கின்ற நிலைமையில் போதுமானதாக இருக்கின்றது. இருப்பினும் நாங்கள் வெகுவிரைவில் இன்னும் மேலதிகமான கையிருப்புக்களை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றொம்.

இவ்வாறான நிலைமையில் இன்னும் சில அங்கிககளை சுகாதார அமைச்சு அனுப்பி வைப்பதாகக் கூறியிருக்கின்றார்கள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post