ஐனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் - சர்வதேச பொறிமுறைகளே தேவை என வலியுறுத்து - Yarl Voice ஐனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் - சர்வதேச பொறிமுறைகளே தேவை என வலியுறுத்து - Yarl Voice

ஐனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் - சர்வதேச பொறிமுறைகளே தேவை என வலியுறுத்து

யாழ் மிருசுவில் பகுதியில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரை வெட்டியூம் சுட்டும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

மிருசுவில் தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்ற   அமையத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் மேல்முறையீட்டின்போது ஐந்து பேர்கொண்ட உயர்நீதிமன்ற   அமர்வினால் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர்.

இவருக்கு வழங்கப்பட்ட இந்;தத் தண்டனை இலங்கை நீதித்துறையை பொறுத்தமட்டில் புறநடையான ஒன்றாகும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இலங்கையில் சாதாரணமாக தண்டனை பெறாத குற்றங்களாகவே காணப்படுகின்றன.

ஆகவே  புறநடையாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பும் ஜனாதிபதியினால் இல்லாமல் ஆக்கப்பட்டு இருப்பது இலங்கையில் தமிழருக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு போதும் நீதி வழங்கப்படமாட்டாது என்பதை மீளவூம் உறுதிப்படுத்துகிறது.

அனைத்துலகும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விடுதலை நடவடிக்கையானது எத்தகைய ஒரு அவலமான சூழ்நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது கருத்து நிலையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது.

மக்களின் பாதுகாப்பற்ற அவலமான துன்பமான ஒரு சூழ்நிலையை தனது அரசியல் லாபத்துக்காகவூம்  சிங்கள பௌத்த மேலாண்மையை இந்நாட்டில் நிலை நிறுத்துவதற்காகவூம் பயன்படுத்திய இந்த இழிசெயல் தமிழ் மக்களாகிய எங்களை மிகுந்த விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியூள்ளது. இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை இந்நிகழ்வூ துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கான நீதி ஒரு போதும் உள்நாட்டில் கிட்டாது என்கின்ற எமது நிலைப்பாட்டையூம் மீள உறுதி செய்கிறது. ஆகவே இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி சர்வதேசத்தின் கரங்களிலேயே இருக்கிறது என்பதை நாங்கள் மீளவூம் வலியூறுத்த விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகளே என்பதை நாங்கள் உறுதியோடு வலியூறுத்துகின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post