கொரோனாத் தொற்றுக்காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டியவை எனக் குறிப்பிட்டு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
ஒருநாளில் ஒரு சில தடவைகள் மாத்திரம் இந் நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
மன உளைச்சல் பசி, தூக்கம் என்பவற்றை பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கு கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது.
தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்குள்ளாகி தம் நோயெதிர்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளை பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆகவே தேவையற்ற செய்திகளையும், வீடியோக்களையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார்.
Post a Comment