மொட்டை விட்டுவிட்டு சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் யாழில் களமிறங்கும் அங்கஐன் - Yarl Voice மொட்டை விட்டுவிட்டு சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் யாழில் களமிறங்கும் அங்கஐன் - Yarl Voice

மொட்டை விட்டுவிட்டு சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் யாழில் களமிறங்கும் அங்கஐன்

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்திலேயே யாழில் பொட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஐன பெரமுனவும் இணைந்து புதுpய கூட்டணி அமைத்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

ஆனால் சிறிலங்கா சுதந்திக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருக்கின்ற அங்கஐன் அந்தக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடாது சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதே வேளை சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சியான பொது ஐனப் பெரமுன யாழ் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அதே நேரம் அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்ற ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழ்க்கில் அக் கட்சியின் வீணைச் சின்னத்தில் போட்டியிடுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post