கொரோனோ வைரஸ் அச்சம் நீங்கும் வரையில் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும் - ஈபீஆர்எல்எப் கோரிக்கை - Yarl Voice கொரோனோ வைரஸ் அச்சம் நீங்கும் வரையில் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும் - ஈபீஆர்எல்எப் கோரிக்கை - Yarl Voice

கொரோனோ வைரஸ் அச்சம் நீங்கும் வரையில் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும் - ஈபீஆர்எல்எப் கோரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அச்ச நிலை நீங்கும் வரையில் பாராளுமன்ற தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்தின் கோரியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமாக இருந்தால் தேர்தலை ஒத்திவைப்பது சிறந்த முடியாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் உலகில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இப்போது இலங்கையிலும் குறித்த வைரஸின் தாக்கம் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயட்சிகள் பாரட்டப்படவேண்டியவை. இருப்பினும் நாட்டு மக்கள் மத்தியில் வைரஸ் தாக்கம் தொடர்பிலான அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி சார்க் நாடுகளின் சந்திப்பில் எது நடந்தாலும் பாராளுமன்ற தேல்தலை நடத்தியே தீருவேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்தலில் களமிறங்கும் அரசியல் கட்சிகள் தமது பிரச்சார கூட்டங்களை மக்களை ஒன்று கூட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் தேர்தலை நடத்தினால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவ்வாறு தமது கொள்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும்.

இன்று (நேற்று) தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நாளாக இருந்த போதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்தாலும்இ வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் அது ஜனநாகமான தேர்தலாக இருக்க முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்கு வந்து வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர வெளிநாட்டில் இருந்து வரும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வந்து ஜனநாயகமான தேர்தல் நடக்கின்றதா என்பதை கண்காணிக்கு முடியாத நிலை ஏற்படும்.

இவை அனைத்திற்கும் மத்தில் நாங்கள் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது என்பது நிச்சையமாக ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
ஆகவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பொறுப்பு மிக்க கட்சி என்ற ரீதியில் மக்களுடைய பாதுகாப்பு என்பது முதன்மையானதும்இ முக்கியமானதாகும்.

 ஆகவே கொரோனா வைரஸ் தாக்கம் என்பதை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான சாதார சூழல் உருவாக்கப்படும் வரையில் தேர்தலை ஒத்திவைப்பதுதான் இந்த நாட்டிற்கு நன்மையாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
இதந்த விடயத்தை ஜனாதிபதி பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் அனைவரும் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாரா உள்ளோம். தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பதற்கான பட்டியர் தயார் செய்யப்பட்டுள்ளது. என்றாலும் ஜனநாயகமான பிரச்சாரம் செய்யவோஇ மக்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்க சூழல் இல்லாத நிலையில் தேர்தலை நடாத்துவது தவறானது.

ஜனநாயகமான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post