விழிப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனோவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் - விஐயகலா - Yarl Voice விழிப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனோவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் - விஐயகலா - Yarl Voice

விழிப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனோவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் - விஐயகலா

வடக்கு மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

தற்பொழுது ஒட்டுமொத்த இலங்கைக்கும் வைரஸானது பாரிய சவாலாக உள்ளது அதிலும் வடக்கை பொருத்தவரைக்கும் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஒரு நோயாளி இனங்காணப்பட்டு கொழும்புக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

எனவே இந்த விடயமானது இனி வடக்கு மக்களுக்கு ஒரு சவாலான விடயமாக காணப்படுகின்றது வடக்கு மக்கள் இனி அவதானமாக செயற்பட வேண்டிய காலம்  அதிலும் குறிப்பாக  மக்கள் மாஸ்க் அணியும் நடைமுறையினை  கட்டாயமாக பின்பற்றவேண்டும்.

  அத்தோடு வீடுகளுக்குள் நுழையும் போதும் வேறு இடங்களுக்கு செல்லும் போதும் கைகளை நன்றாகக் கழுவி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி செயற்பட முன்வர வேண்டும் இல்லையெனில் வடக்கு மக்களுக்கு பாரிய அழிவை தரும் விடயமாக வைரஸ் காணப்படுகின்றது.

எனவே வடக்கு மக்கள் இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில்அதாவது  எதிர்வரும் இரண்டு கிழமைகளிற்காவது வடக்கு மக்கள் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக செயற்பட வேண்டும்.

அத்தோடு ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் வீடுகளில் ஒன்று கூடுவதை யோ அல்லது ஒன்றுகூடி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ அல்லது கூட்டங்கள் கூடுவதை நிறுத்தி வீதிகளில் நடமாடுவதை நிறுத்தவேண்டும். மக்கள் அமைதியான முறையில் வீடுகளிலிருந்து தமது கடமையை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்குட்பட்ட  64 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணப் பொருட்களும் இன்றிலிருந்து வழங்கப்பட உள்ளன.

 எனவே மக்களே நீங்கள் வீடுகளிலிருந்து தங்கள் கடமையை செய்வதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும்  தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post