பொதுஐன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன் - Yarl Voice பொதுஐன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன் - Yarl Voice

பொதுஐன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் நிபுணர்கள் தொழிற்துறையினர் சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் விரிவுரையாளருமான சுரேன் ராகவனுக்கு பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி சமூக ஆய்வாளர் கெவிது குமாரதுங்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன் லக்ஷமன் பியதாச ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர் டில்சான் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸசபில் முகாமைத்துவப் பணிப்பாளர் தனுஜன தம்மில ரத்மலே பேராசிரியர் திஸ்ஸ விதாரன சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை ரூபசிங்க குணவர்தன மஞ்சுளா விஜயகோன் திஸாநாயக் வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் அஸ்மின சட்டத்தரணி நிமால் ஆர் ரணவக்க சட்டத்தரணி தர்மசேன கலாசூரிய விரிவுரையாளர் சுரேன் ராகவன் பேராசிரியர் சரித ஹேரத் துரைசாமி மதியுகராஜா தொன் உபுல் நிசாந்த விசேட வைத்திய நிபுணர். ஜி.வீரசிங்க சரோஜனி ஜயலத் விமல் கி.கனகே ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க வைத்திய நிபுணர் சீதா அறுகம்பேபொல பியதாச பேராசிரியர் ரஞ்சித் பண்டார டிரான் அலஸ் ஜயந்த பெரேர சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் தேசிய பட்டியலில் உள்ளடங்குகின்றானர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post