கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையங்களை வடக்கின் பல இடங்கிலும் அமைக்க நடவடிக்கை - Yarl Voice கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையங்களை வடக்கின் பல இடங்கிலும் அமைக்க நடவடிக்கை - Yarl Voice

கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையங்களை வடக்கின் பல இடங்கிலும் அமைக்க நடவடிக்கை

கொரோனோ தனிமைப்படுத்தும் மையங்களை வடக்கு மாகாணத்திலும் பல இடங்கிளலும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய ஏற்கனவே வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முல்லைத்திவிலும் அமைக்கப்பட்டு சந்தேக நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாழிலும் கிளிநொச்சியிலும் இந்த முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக தெரிய வருகிறது.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலஙகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கமைய கெரோனோ தொற்று ஏற்பட்டிருப்பதாக 72 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மேலும் பலர் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திலும் அதே போன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனோ தொற்று பரிசோதனை அல்லது தனிமைப்படுத்தும் முகாம்களை ஏற்கனவே அமைத்துள்ளது.

இந் நிலையில் சர்வதேச விமான நிலையம் ஊடுhக இலங்கைக்கு வருகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்காக வடக்கில் மேலும் பல இடங்களில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இதனடிப்படையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இந்த முகாம்களை அமைக்கவுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஆட்கள் கொண்டுவரப்பட்டள்ளனர்.

இந் நிலையில் யாழ்ப்பாணத்திலும் சில இடங்களிலுள்ள இரானுவ முகாம்களில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தும் இங்கும் பலர் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post