கொரோனோ தொற்றில் யாழில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார் - உத்தியபூர்வமாக அறிவிப்பு - Yarl Voice கொரோனோ தொற்றில் யாழில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார் - உத்தியபூர்வமாக அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்றில் யாழில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார் - உத்தியபூர்வமாக அறிவிப்பு

கொரோனோ தொற்றுச் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்;கப்பட்ட ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனோ தொற்றில் யாழில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  .

யாழ்ப்பாணம் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதனரிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தததையடுத்து அவருடன் பழகியவர்களுக்கும் கொரோனொ தொற்று இருக்கலாமென்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததது.

இதனையடுத்த அவருடன் தொடர்பை பேணிய இரண்டு பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் இருவரில் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டள்ளது.

இதனையடுத்து தேவாலய ஆராதனையில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றவருக்கு தொற்று இருக்கா இல்லையா என்பது தொடர்பான மருத்துவ பரிசொதனை அறிக்கை இதுவரையில் வெளிவரவில்லை. அந்த அறிக்கை வந்த பின்னரே அது தொடர்பான இறுதி முடிவு தெரிய வருமெனத் கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post