அறிகுறிகள் தென்படுவோர் தம்மை சுய தனிமைக்குட்படுத்த வேண்டும் - சத்தியமூர்த்தி - Yarl Voice அறிகுறிகள் தென்படுவோர் தம்மை சுய தனிமைக்குட்படுத்த வேண்டும் - சத்தியமூர்த்தி - Yarl Voice

அறிகுறிகள் தென்படுவோர் தம்மை சுய தனிமைக்குட்படுத்த வேண்டும் - சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையில் 17 போ் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியிருக்கின்ற னா். மேலும் 3 பேருக்கு சாதாரண சுவாச தொற்றுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்றது. அவா்களுடைய பாிசோதனை அறிக்னை இன்று கிடைக்கப்பெறும்.

பாிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னா் அவா்களுக்கு மேலதிக சிகிச்சையளிப்பதா? அல்லது வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பதா? என்பதை தீா்மானிப்போம். மேலும் வடமா காணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் அடையாளம் காணப்படவில்லை.

எனினும் மக்கள் சுகாதார அறிவுரைகளை சாியாக பின்பற்றி நடக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளுகிறோம். மேலும் மதபோதகா் ஒருவருடன் பழகியதாக ஒருவா் சிகிச்சை பெற்றுள்ளாா். குறித்த மதபோதகருக்கு கொரோனா தொற்றுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஊடகங்கள், இணையதளங்கள் ஊடாகவே அவ்வாறு கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மதபோதகா் கலந்து கொண்ட ஆராதனையில் கலந்து கொண்டவா்கள் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அதற்கு சிகிச்சையளிக்க தயாராக இருக்கின்றோம்.

மக்கள் அச்சப்படதேவையில்லை. மேலும் சந்தேகத்திற்குாியவா்கள் மற்றும் சில அறிகுறிகள் தென்படுவோா் தமது நடமாட்டத்தை குறைத்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அவா் மேலும் கூறியிருக்கின்றாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post