தமிழ்த் தேசத்தை அழிக்க செயற்பட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - கஜேந்திரகுமார் - Yarl Voice தமிழ்த் தேசத்தை அழிக்க செயற்பட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - கஜேந்திரகுமார் - Yarl Voice

தமிழ்த் தேசத்தை அழிக்க செயற்பட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - கஜேந்திரகுமார்


தமிழ் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்கு தள்ளிச் சென்றவர்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் ஊடாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளோம்.

யுத்தம் முடிவடைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஸ்தாபித்து 10 வருடங்கள் கழிந்துள்ளன. இந்த 10 வருடங்களில் நாங்கள் தமிழ் மக்களுக்கு பல கருத்துக்களை கூறி வந்துள்ளோம்.

குறிப்பாக தமிழ் தேசத்திற்கு வரப்போதும் ஆபத்துக்கள் தொடர்பான முன்கூட்டியே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமிழ் தேசத்திற்கான ஆபத்துக்கள் தொடர்பில் நாங்கள் கூறிவந்த அத்தனை கருத்துக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் நாங்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளோம். எம்மை பொறுத்தவரையில் புதிய தலமைத்துவம் தமிழ் தேசத்திற்கு அத்தியாவசிமான ஒன்றாக உள்ளது.

அதை கடந்த 10 வருடங்களாக சொல்லிவந்தோம். இதனை இன்று மக்களும் தாங்களாகவே அனுபவ ரீதியான முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு வந்துள்ளார்கள்.

அந்த புதிய தலமைத்துவத்தை நேர்மையாகவும், கொள்கை ரீதியாக இறுக்கமாகவும், தூய்மையாகவும் வழங்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரா உள்ளது.

இந்தவகையில் எமது கட்சியின் வேட்பாளர்கள் தமிழ் தேசத்தினுடைய 5 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றார்கள்.

அந்த அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நேற்று) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்மை பொறுத்துவரையில் இந்த தேர்தல் புதிய ஒரு ஆரம்பமாக இருக்கும்.

தமிழ் தேசம் கடந்த 10 வருடங்களாக சரியான தலமைத்துவம் இல்லாமல், பிழையான வழிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலுடைய முடிவுகள் அந்த பிழையான தலமைத்துவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான, உறுதியா, தமிழ் தேசத்தில் நலன்கள் சார்ந்து புதிய பாதை ஒன்றுக்கு வழிவகுக்கும்.

அந்த புதிய பாதைக்கான தலமையினை நாங்கள் கொடுப்போம். இதற்கான முன்கூட்டிய தமிழ் மக்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றோம் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post