தமிழ்க்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை ஐ.தே. கட்சியினாலே கொடுக்க முடியும் - விஐயகலா - Yarl Voice தமிழ்க்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை ஐ.தே. கட்சியினாலே கொடுக்க முடியும் - விஐயகலா - Yarl Voice

தமிழ்க்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை ஐ.தே. கட்சியினாலே கொடுக்க முடியும் - விஐயகலா

தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசிய கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது ஆட்சியில் எறியிருப்பவர்களுக்கு ஜனநாயகம் என்றாலே என்னவென்று தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றம் சென்றிருந்தேன். இதன் முன்னர் இரண்டு தடவைகள் எனது கணவர் மகேஸ்வரன் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியிலும், மூன்றாவது தடவை கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டும் பாராளுமன்றம் சென்றிருந்தார்.

கடந்த காலங்களில் ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் மக்களுக்கான விடுவு காணப்பட்டது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புக்கள் முட்டுமல்லாது தீர்வுத்திட்டம் தொடர்பிலும் பல முன்னெடுப்புக்களை செய்திருந்தோம்.

ஜனநாயக ரீதியான வாழ்க்கையினை கடந்த 5 வருடமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக எங்களுடைய கட்சியின் வேட்பாளருக்கு வடக்கு, கிழக்கு மாக்கள் வாக்களித்திருந்த வேளையிலும் மாற்றுக் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

அந்த மாற்று கட்சியால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எந்த பயணும் கிடைக்கப் போவதில்லை. இதனை கடந்த காலத்தில் அவர்களின் ஆட்சி தெட்டத் தெளிவாக காட்டியிருந்தது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த வேளை தமிழ் மக்கள் சொல்லனதுயரங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள். உயிர்களை இழந்து மாற்றுத்திறனாளிகமாக மாற்றப்பட்டோம். காணாமல் போனவர்களை அவர்களின் உறவுகள் இன்றுரைக்கும் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இனால் எமது ஜக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைத்த பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தினை திறந்துள்ளோம். முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்புக்கான நிதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்த கொப்பனவுகளை உயர்த்திக் கொடுத்துள்ளோம். மேலும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை வழங்கியிருந்தோம். அதிகளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

இதற்கும் அப்பால் தீர்வுத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தோம். இது நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அச் சந்தர்ப்பத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் கட்சியினருடன் கைகோர்த்தார். 52 நாட்கள் போராட்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருந்தோம்.

வடக்கு கிழக்கை ஆண்டு கொண்டிருந்த தலைவருடனான பேச்சுவார்த்தை ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. நேர்வே நாட்டில் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாகத்தான் பாதைகள் திறந்துவிடப்பட்டன.

இவ்வாறு எமது ஆட்சியில்தான் ஜனநாயகம் என்பது உருவாக்கப்பட்டிருந்தது. இன்றைய அரசாங்கத்திற்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாது. அராயகம்தான் இங்கு நடக்கின்றது.

எனவேதான் எமது ஆட்சிக் காலத்தில் இடை நடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் தொடர்ந்து முன்னெடுப்பதற்று எமக்கான பாராளுமன்ற பிதிநிதித்துவம் தேவையாக உள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது மட்டுமல்லாமல், ஏனைய தேவைகளையும் ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post