தீர்விற்கான பாதை எது என்பது தெரியாது, வெற்றுக் கோசம் பயனற்றது, வீரன் சிவாஜிக்கு ஏன் வாக்களிக்கவில்லை? சுமந்திரன் - Yarl Voice தீர்விற்கான பாதை எது என்பது தெரியாது, வெற்றுக் கோசம் பயனற்றது, வீரன் சிவாஜிக்கு ஏன் வாக்களிக்கவில்லை? சுமந்திரன் - Yarl Voice

தீர்விற்கான பாதை எது என்பது தெரியாது, வெற்றுக் கோசம் பயனற்றது, வீரன் சிவாஜிக்கு ஏன் வாக்களிக்கவில்லை? சுமந்திரன்


தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைப்பில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்ற கருத்துரையாடலிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏஇசுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

தேர்தல் காலத்திலே இப்படியான கூட்டங்கள் நடத்துவது நல்லதல்ல என எங்களுடைய கட்சிலையே எனக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அத்தோடு தவிர்ப்பது நல்லது என எனக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. ஆனாலும் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்ற அடிப்படையில் நான் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றேன்.

இவ்வாறான நிலைமையில் இங்கு சில கேள்விகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல எதிர்பார்ப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு சட்டத்தரணிகளுக்கு மட்டும் தான் அரசியலுக்கு உள்ளீர்க்கப்படுகிறார்களா தேர்தல் வேட்பாளர் நியமனம் புலிகள் தொடர்பான நிலைப்பாடு என்பன தொடர்பிலும் கேள்வி எழுப்பட்டிருக்கிறது.

மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் கொள்கைகளில் இருந்து இந்தக் கேள்விகள் எழுப்பப்ட்டு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மக்களிடத்தே மாற்றங்கள் ஏற்பட்டு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஆகையினால் இந்தக் கேள்விகள் தொடர்பில் எங்களது விளக்கங்களையும் நான் முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் தேவைகளின் நிமித்தம் நாம் மக்களுக்காகச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் செய்யும் அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல. அதே நேரம் இணக்க அரசியலும் அல்ல. அதே நேரம் எங்களுடைய உரிமைசார் விடயங்களிலும் எந்தவித விட்டுக் கொடுப்பும் கிடையாது. ஆகையினால் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வை அடைய நாங்கள் முனைந்தோம். அதனைவிட தீர்வை அடைய வேறு என்ன வழி இருக்கிறது.

ஆகவே தான் பேச்சுவார்த்தை மேசையில் அமர்;ந்திருந்து நாங்கள் அதனைச் செய்கிறொம். அவ்வாறு பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கிற பொழுது சில விட்டுக் கொடுப்புக்கள் இருக்கத் தான் செய்யும். அதிலும் எங்களுடைய அடிப்படை நிலைப்பாடுகளில் நாங்கள் விட்டுக் கொடுப்புக்களைச் செய்யவில்லை. ஆனால் இடைக்கால அறிக்கை வந்த போதெல்லாமல் என்னவிதமாக நாங்கள் விமர்சிக்கப்பட்டோம் என்பது உங்களுக்கு தெரியும்.

குறிப்பாக ஒற்றையாட்சி என்றும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அது ஒற்றையாட்சி அல்ல. இது தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் பதிலளித்திருக்கிறோம்.  ஆகவே இந்த முயற்சி முடிவடைந்த ஒன்றல்ல. இது சந்திரிகா கொண்ட வந்த அரசியலமைப்பு தான். அந்த அமைச்சரவையிலையே மகிந்த மைத்திரி இருந்தனர். ஆகவே அந்த முயற்யை தொடருகின்ற போது இதனைப் பற்றியெல்லாம் பேசலாம். ஏங்களில் பலருக்கு அவநம்பிக்கை உள்ளது. அதை நான் குறை சொல்லவில்லை. அதற்காக மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கிற நாங்கள்

தனித்துவமான இனம் சுயமரியாதையோடு வாழ்வதாக இருந்தால் அரசியல் அதிகாரங்கள் பிகரப்பட வேண்டும் என்பது அத்தியாவிசயமானது. ஆந்த அடிப்படையில் செயற்பாடுகள் தொடரும். அது ஆக்கபூர்வமான முறையில் முன்னேறக் கூடிய வழியிலே தொடரும். வெறுமனே கோசங்களை மட்டும் போட்டுக் கொண்டிருப்பவர்களாக நாங்கள் இருக்க மாட்டோம்.

அவ்வாறு கோசம் போடுபவர்களிடம் இதற்கான வேறு வழி இல்லை. அவர்களிடம் வேறு வழி என்ன என்று கேட்டால் எதுவும் சொல்லப்போறதல்லை. ஏனென்றால் அவர்கள் வழியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. கோசம் மட்டும் தான். வெற்றுக் கோசமங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அதனால் வருகிற விமர்சனங்களையும் நாங்கள் சுமந்து கொண்டு தான் உருப்படியாக அதிகாரப் பகிர்வு எங்களது மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனபடியினால் தான் சமஸ்டி என்ற பெயர்ப்பலகை கூட தேவையில்லை என்று நான் சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் சமஸ்டி வேண்டாம் என்று சொன்னவர்கள் எதிர்த்தவர்கள் இன்றைக்கு அவர்களுக்கு சமஸ்டி மீது ஏற்பட்டுள்ள காதல் அதீத காதல். ஏதோ தாங்கள் தான் சமஸ்டியைக் கண்டு பிடித்த மாதிரி இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் சொல்வது சமஸ்டியில் இரண்டு முக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த குணாதிசயங்கள் இந்த அரசியமைப்பிற்குள் வருமாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம் என்று தான். இந்த வரைபிலே அந்தக் குணாதிசயங்கள் இருக்கின்றன. பாரிய படிகளை நாங்கள் கடந்து வந்திரக்கின்றொம்.

ஆனால் வரப்பொகிற நாட்களில் இதனை எப்படி அடையப் போகிறீர்கள் என்று கேட்டால் உண்மையாகச் சொல்லுகிறேன் எனக்குத் தெரியாது. ஏன்னுடைய நேர்மையான பதில் எப்படியாக அடையப் போகிறோம் என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்னும் சரியான வழி எதுவென்று தெரியாத காரணத்தினால் பொத்தென்று போட்டுவிட்டும் போக முடியாது. ஆனால' இதை அடையும் பாதையின் சந்திக்கு வருகிறோம். அது தான் ஐனநாயக கட்டமைப்பில் வரவிருக்கின்ற தேர்தலாகும்.

இப்படிhகத் தான் கடந்த முறை ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்தோம். அதில் என்ன நன்மை என்று கேட்கிறவர்களிடத்தே நான் சில கேள்வியை கேட்கிறேன். பாதுகாப்பு கெடுபிடிகளில் மாற்றம் இருந்ததா இல்லையா? மக்கள் சுயரீனமாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டதா இல்லையா?. இவ்வாறானதொரு மாற்றம் அத்தியவசியமான தேவையாக இருந்தது. இது எமது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த மாற்றத்தை இப்ப சில மாதங்களில் உணரக் கூடியதாகவும் இருக்கிறது.

இந்தத் தேர்தலிலலும் நாங்கள் பலமான ஒரு அணியாகப் போவது தான் அவசியம். அது தான் மக்களுடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கிறது. அப்படியாகத் தான் மக்கள் தீர்ப்பையுமு; கொடுப்பார்கள். இது பெருமைக்காக வீராப்பாக பேசுற பேச்சில்லை. மக்களின் நாடியைப் பிடித்து சொல்கிற கூற்று தான் இது.

முன்னாள் வடக்கு முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்னர் எண்ணிக்கை முக்கியமல்ல ஒருவர் போனாலும் பேசலாம் என்று சொல்லியிரக்கின்றார். ஆக இப்பவே அவருக்கு ஒருவர் தான் போகலாம் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் ஐனநாயகம் என்பது எண்ணிக்கையில் தான் இருக்கிறது.  அந்த எண்ணிக்கை எங்களுக்கு அவசியமாக இருக்கிறது. வேறு எவராலும் 18  20 பேரை அனுப்ப முடியுமா என்றால் முடியாது. ஆகையினால் ஏன் வாக்கை வீணடிக்கறீர்கள்.

ஆவ்வாறாயன் கடந்த ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சஐpத் பிரேமதாசதவிற்கு ஏன் வாக்களித்தார்கள். சிவாஐpலிங்கத்திற்கு வாக்களித்திருக்கலாமே. ஆனால் கொள்கை நிலைப்பாட்டில் கொள்கைப் பிடிப்பாளனாக மக்களுக்காக ஆயுதம் எடுத்து போராடியவர் என்ற அடிப்படையில் அதிலும் வடக்கு மாகாண சபையில் இனப்படுnhகலை தீர்மானத்தை விக்கினேஸ்வரன் கொண்டு வருவதற்கு முன்னர் ஐந்து தடவைகள் கொண்டு வர முயற்சி செய்த அந்த வீரனுக்கு வாக்களித்திருக்கலாமே.

ஏனெனில் மக்கள் வாக்கை விணாக்க விரம்பவில்லை. அதனால் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதே போல இந்த தடவையும் மக்கள் வாக்கை விணாக்க விரும்பமாட்டார்கள். ஒருவரை அனுப்ப வேண்டுமென்று அவசியம் கிடையாது என்பது மக்களுக்கு தெரீயும். ஆகையினால் ஒரு அணியாக எண்ணிக்கையில் பலமாக நாங்கள் போக வேண்டுமென்ற அவசியம் மக்களுக்கு தெரியும். அது நடக்கிற போது முடிவுகள் வருகிற போத தான் அடுத்த பாராளுமன்றத்தில் வழிகளும் புலனாகும்.

குடந்த பாராளுமன்றத்தில் அபிபடியான திறன் இருந்தும் சரியாகச் செயற்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அந்த விமர்சனத்தை ஓளரவிற்கு நானும் ஏற்றுக் கொள்கிறென். இப்ப நானும் நின்று பின்னால் திரும்பி பார்க்கின்ற போது இதனை வித்தியாசமாகச் செய்திருக்கலாமா என்ற எண்ணங்கள் வருகிறது. ஆனால் அந்ததந்த நேரங்களில் தெற்கையும் குழப்பாமல் அனைவரதும் சம்மதத்தோடு முடிவிற்கு வருவது சாத்தியமாக இருக்கிற பொழுது நாங்கள் கவனமாகச் செயற்பட்டோம். ஆனால் கொஞ்சம் கூடுதலாக கவனமாக இருந்து விட்டோமோ தெரியாது என நான் இப்பொழுது நினைக்கிறேன்.

இதேவேளை ரணில் உங்களை ஏமாற்றி விட்டார் என்று இப்பொழுதாவது ஏற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்டிருக்கின்றனர். ரணில் உங்களை ஏமாற்றும் வகையிலையே செயற்பட்டார் என இது வெளியில் இருந்து வருகின்ற விமர்சனம். அது மட்டுமல்ல வீட்டுக்குள்ளிருந்தும் இதே விமர்சனம் வருகிறது.

ஆனால் ஆரம்பத்தில் மக்கள் கருத்தறியும் குழுவை உருவாக்கியது ரணில் தான். அதிகாரப் பகிர்விற்கு தெற்கில் கூட பெரியளவில் எதிர்ப்பில்லை என்பது தெரிந்திருந்தது. அதன் பின் அறிக்கை தயாரிக்கப்பட்டு அது வெளியிடுகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பின்வாங்கத் தொடங்கியது. ஆனால் அதிகாரப் பகிர்விற்காக அது பின்வாங்கத் தொடங்கவில்லை. நிறைவேற்றதிகார ஐனாதிபதி ஒழுpப்புமுறைக்கு தான் பின்வாங்கியது.

ஆந்த பின்வாங்கல் தொடர்ந்த பின்பு பிரதம மந்திரியாகவும் வழிநடத்தல் குழுவின் தலைவராகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்க இது நடக்காது நடக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்து இழுத்துக் கொண்டு சென்னாரா இல்லையா என்பதை என்னால் nதிளவாகச் சொல்ல மடியாது. அப்படியும் இருக்கலாம். ஆனால் அதுவரைக்குமாவது அவர் நடப்பிப்தற்காக மமுயன்று அவரே மன்னின்று செயற்பட்டிருக்கின்றார்.

நுடப்பிக்கக் கூடியதைச் செய்வது தான் நீண்டகாலமாக அரசியலில் இருப்பவர்களுக்கு அனுபவமாக இருக்கிறது. அந்த அனுபவங்கள் தான் ரணிலுக்கும் இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஏமாற்றி விட்டார் இவர் ஏமாற்றி விட்டார் நம்புகிறீர்களா இல்லையா என்று கேள்விகள் கேட்கப்பட்ட போது ஒருபோதும் நம்புகிறென் என்ற பதில் ஓரிடத்திலும் நான் சொன்னது கிடையாது.

ஆகையினால் நாங்கள் நம்பிப் போய் இதனைச் செய்யவில்லை. ஆனால் ஒரு சந்தர்ப்பம் எழுந்திருக்கிறது. அதாவது இரு பிரதான கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்த செயற்படுகிற சந்தர்ப்பம் வந்திருப்பதால் அந்தச் சந்தர்ப்பத்திலே நாங்கள் இயன்றளவு பயன்படுத்தினோம். அதனாலே ஒரு விளைவு வந்திருக்கிறது. அதை எப்படி கொண்ட செல்வது என்பது எங்களது பலனைப் பொறுத்து இருக்கிறது.

தேர்தல் நேரத்திலே வடக்கு மாகாண சபை இழைத்த தவறை சொல்வதென்பது விக்கினெஸ்வரனுக்கு எதிராக இப்ப சொல்லப்படுகிற பிரச்சாரமாக அமையும். ஆகையனால் அதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு கிடைத்த பாரிய சந்தரப்பங்களை மாகாண சபை தவறவிட்டுள்ளது.

மேலும் ஐநா சபை மிள்கட்டுமானத்திற்கு பாரிய நிதியை கொடுத்த போது கூட தன்னுடைய உறவினருக்கு பதவி கொடக்காவிட்டால் அந்த நிதி வேண்டாமென்று கூட அவர் பதில்க் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதமும் எங்களுக்கு உள்ளது. ஆனாலும் இப்ப அவர் வெளியில் இரப்பதால் அதைச் சொல்வது விமர்சிப்பதாக இருக்கிறது. வடக்கு மாகாண கட்டமைப்புக்களிலெ கூட்டமைப்பு பாரிய திட்டங்களில் தோல்வியுற்றுள்ளது.

இதேபோல தேர்தல் நியமனக் குழு விடயங்கள் தொடர்பிலும் அதன் விடயங்கள் தொடர்பிலும் சில செய்திகள் வந்திருக்கின்றன. முக்கியமான தேர்தலில் கட்சிக்கு பொறுப்பொடு பாரப்படுத்தியிருக்கிற பொறுப்புள்ளவர்கள் தான் அடிமட்ட பொறுப்பற்ற செயல்களைச் செய்திருக்கிறார்கள். ஆக அவர்களே செய்கிற நியமன தெரிவில் நாங்கள் எப்படி நம்பிக்கை வைப்பது என்று நானே அந்தக் குழுவில் கேள்வி கேட்டிருக்கிறென்.

பொதுவெளியில் நான் எடுத்த நிலைப்பாட்டை நான் சொல்லுவென். சேன்ற தேர்தலிலும் இதை நான் வெளிப்படையாக சொல்லியிரந்தென். அதாவது பாரர்ளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக நியமனம் கொடுக்க வேண்டாம் என்று திரும்ப திரும்ப நான் சொல்லியும் கட்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோரையும் ஒரே இடத்தில் மதிப்பீடு செய்யுங்கள் என்று கேட்டும் அதைச் செய்யவில்லை. கடந்த தேர்தலிலும் இதே நிலைமை இருந்த போது மக்கள் பார்த்தக் கொண்டார்கள். அகவே இம்முறையும் கட்சிக்குள் அதனைச் செய்ய மடியாத நிலையில் மக்களிடம் விட்டுவிட்டால் இனி மக்களே பார்த்து முடிவெடுப்பார்கள்.

ஆனால் நியமனங்கள் கொடுக்கிற சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பிற்கு முதல் மாற்றங்கள் எல்லாம் நடக்கலாம். அவ்வாறாக அறிவிப்பு வந்த பின்னர் நாங்கள் செயற்பட வேண்டும். அது வரப்பொகிற தேர்தல் முடிவுகளை தீர்மானித்து நாங்கள் எடக்கப் போகிற முயற்சிக்கு முக்கிய பபங்களிப்பாக இருக்கும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post