பேரம் பேச ஆசனங்களை தாருங்கள் என சம்மந்தர் கேட்பது கதிரைகளை பிடிப்பதற்கே - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice பேரம் பேச ஆசனங்களை தாருங்கள் என சம்மந்தர் கேட்பது கதிரைகளை பிடிப்பதற்கே - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

பேரம் பேச ஆசனங்களை தாருங்கள் என சம்மந்தர் கேட்பது கதிரைகளை பிடிப்பதற்கே - சுரேஸ் குற்றச்சாட்டு

தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கு கிடைத்த சகல சந்தா்ப்பங்களையும் தவறவிட்ட நிலையில் இப்போது பேரம் பேசுவதற்கு 20 ஆசனங்களை தாருங்கள் என கேட்பது வெறுமனே கதிரைகளை பிடிப்பதற்காக முயற்சி மட்டுமேயாகும். அதன் ஊடாக பேரம் பேசல் நடக்கப்போவதில்லை. என்பதே உண்மையாகும்.

மேற்கண்டவாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளாா். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்..

கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கருத்து தொிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினா்களை மக்கள் கொடுக்க வேண்டும். என கூறியிருக்கின்றாா்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக பேரம் பேச தவறியது எதற்காக? என்ற கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் விளக்கமளிக்கவில்லை. இப்போது பேரம் பேசும் சக்தியை கொடுங்கள். என கேட்கிறாா்கள்.

போருக்கு பின்னா் 10 வருடங்களில் தமிழ் மக்கள் பெரும் ஒத்துழைப்பை வழங்கினாா்கள். எதிா்கட்சி அந்தஸ்த்தும் கூட தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கின்றது. அப்போதும் பயன்படுத்தவில்லை.

மேலும் வரவுசெலவு திட்டத்தின்போதும் ஆட்சி கவிழ்ப்பின் போதும் கூட பேரம் பேசுவதற்கான மிக சிறந்த சந்தா்ப்பம் கிடைத்திருந்தது. ஆனாலும் அதனை பயன்படுத்தவில்லை. ஆகவே பேரம் பேசுவதற்கு கிடைத்துள்ள சந்தா்ப்பத்தை பயன்படுத்த தவறியது எதற்காக? என்பதை கூட்டமைப்பு கூறவேண்டும்.

மேலும் கிடைத்த சந்தா்ப்பங்களை தவறவிட்டு இப்போது பேரம்பேச சந்தா்ப்பம் கேட்பது கதிரையை நிரப்பும் வேலை மட்டுமேயாகும். அதனால் பேரம் பேசல் நடக்காது என்பதே உண்மை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post