சோதணைச் சாவடிகளில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் நோயாளர்களின் பயணத்திற்கு தடை விதிக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கiயில்:-
ஊரடங்கு சட்டம் நடமுறையில் இருந்தாலும் வைத்திய சாலைக்கு நோயாளர்கள் வருகை தரலாம் வடக்கில் உள்ள 90 வீதமான வைத்திய சாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு உள்ளன. அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகின்றார்கள்.
பொது மக்கள் வைத்திய சாலைக்கு செல்வதற்கு ஊடரங்கு நேரங்களில் வீதிகளில் சோதணைச் சாவடிகளில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் ஒத்துழைப்வை வழங்குவார்கள். நோயாளர் காவு வண்டிகளின் உதவியுடன் மக்கள் வைத்திய சாலைகளுக்கு வந்து சேர முடியும் என்றார்.
Post a Comment