பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பி ஆசிரியையின் தாலிக்கொடி அபகரிப்பு - செம்மணியில் சம்பவம் - Yarl Voice பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பி ஆசிரியையின் தாலிக்கொடி அபகரிப்பு - செம்மணியில் சம்பவம் - Yarl Voice

பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பி ஆசிரியையின் தாலிக்கொடி அபகரிப்பு - செம்மணியில் சம்பவம்

பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் தாலிக் கொடி மற்றும் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் வந்தவர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..

யாழ்.கந்தர்மடத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரயை நாவற்குழியிலுள்ள பாடசாலையொன்றில் கற்பித்து வருகின்றார். இந்தப் பாடசாலைக்கு  ஒவ்வொரு நாளும் காலையில் இதே வீதியால் சென்று சென்று மதியம் வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதே போன்றெ நேற்றும் பாடசாலைக்குச் சென்றுவிட்டு பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் செம்மணிப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலலில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் குறித்த ஆசிரியயையின் 6 பவுண் தாலிக் கொடி மற்றும் 2 பவுண் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியை யாழ் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகுpன்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post