இலங்கைக்கு வந்தது கொரோனா, முதல் நோயாளி கண்டுபிடிப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice இலங்கைக்கு வந்தது கொரோனா, முதல் நோயாளி கண்டுபிடிப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

இலங்கைக்கு வந்தது கொரோனா, முதல் நோயாளி கண்டுபிடிப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்றியவர் என கூறப்படுகிறது.

இலங்கையில் முதல் கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அவசர அறிவிப்பு ஒன்றை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கும்படி மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நபர் 52 வயதுடைய சுற்றுலா பயணிகள் வழிகாட்டியாக தொழில் புரிபவர் என்றும் அவரும் அவரது சேவையை பெற்ற வெளிநாட்டவர்களும் பழகிய மற்றும் சென்று வந்த இடங்கள் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த செய்தி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post