யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆறு பேருக்கு மேற்கொண்ட பரிசொதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனோ தொற்று இல்லை என்று இன்று காலையில் பணிப்பாளர் அறிவித்திரந்தார்.
அதே நேரத்தில் இன்னும் ஆறு பேருக்கு பருpசொதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந் நிலையில் அந்த ஆறு பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் அவர்களுக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பது இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆக மொத்தத்தில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டு இன்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்ட 12 பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கொரோனோ சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட ஏற்கனவே 50 பேர வெளியாகியிருக்கின்ற நிலையில் இந்த ஆறு பேருடன் சேர்த்து இதுவரையில் 56 பேர் பரிசொதனைகளில் தொற்று இவல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர்.
ஆயினுமு; ஒருவருக்கு மட்டும் இதுவரையில் கொரோனோ உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று வைத்திய சாலைக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் யாழில் இதுவரையில் நான்கு பேருக்கு கொரோனோ தொற:று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Post a Comment