வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையுல் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வடக்கில் இருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக பதியப்பட்டுள்ள அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரும் கம்பகா மாவட்டத்தில் 40 ஆயிரம் பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் உள்ளனர்.
இதனால் தங்கியுள்ள மாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு அனுப்புவது என்ற விடயத்தில் தேசிய ரீதியிலேயே அதாவது ஜனாதிபதி செயலணியில் முடிவினை எட்டவேண்டிய நிலமையுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.-
Post a Comment