தேர்தல் காலத்திலும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணணைக்களப் பணிப்பாளர் திடிர் இடமாற்றம் - Yarl Voice தேர்தல் காலத்திலும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணணைக்களப் பணிப்பாளர் திடிர் இடமாற்றம் - Yarl Voice

தேர்தல் காலத்திலும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணணைக்களப் பணிப்பாளர் திடிர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சினால் தேர்தல் காலத்தில் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்றபோதும் தற்போதைய கொரோனா நெருக்கடியின் பெயரில் பாவட்டத்தில் செயல்பட்ட ஓர் வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தேர்தல் காலம் என்பதனால் குறித்த இடமாற்றம் முறகேடானது எனவும் குறித்த விடயத்தில் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-

0/Post a Comment/Comments

Previous Post Next Post