சந்தேகத்தில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 233 பேர் இன்று விடுவிப்பு - Yarl Voice சந்தேகத்தில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 233 பேர் இன்று விடுவிப்பு - Yarl Voice

சந்தேகத்தில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 233 பேர் இன்று விடுவிப்பு

கொரோனோ சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 234 பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனோ தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பலரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தனர்.

இவ்வாறு பல இடங்களிலும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்திலும் கொடிகாமம் பகுதியிலுள்ள இரானுவ முகாமிலும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு வெளிநாடகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 234 பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பதால் இன்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்னளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post