இலங்கையில் அதிகரித்து வருகின்ற கொரோனோ வைரஸ் தாக்கத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கொரோனோ நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார துறையினரை மட்டுமல்லாது நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கொரோனோ நோயாளி ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டது முதல் அதனைக் கட்டப்படுத்த பல்வெறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய கொரோனோ வைரஸ் தாக்கம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் நேற்று மட்டும் 47 நோயாளர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதே நேரம் பல நுாற்றுக் கணக்கானோர் சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் நேற்று இரவு வரை இலங்கையில் 417 பேர் கெர்ரோனோ தொற்றில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment