கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் - மகாநாயக்க தேரர்களிடம் ஐனாதிபதி - Yarl Voice கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் - மகாநாயக்க தேரர்களிடம் ஐனாதிபதி - Yarl Voice

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் - மகாநாயக்க தேரர்களிடம் ஐனாதிபதி

இலங்கையில் கலைக்கப்பட்ட பாராளுமுன்றத்தை மீண்டும் கூட்டவே மாட்டன் என ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் தாக்கத்தையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் பாராளுமுன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென எதிர்க் கட்சிகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அத்தோடு சட்ட ரீதியாகவும் உள்ள பிரச்சனைகளை எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

ஆயினும் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகவே இருக்கும். அதனை மீளக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என ஐனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர்கள் தொடர்ந்தும்  கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இலங்கையிலுள்ள மகாநாயக்க சங்கத்தின் நேற்று ஐனாதிபதியைச் சந்தித்துக் கலந்தரையாடியிருந்தனர். இதன் போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று நிலைமை மற்றும் அதனை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐனாதிபதியுடன் பேசியிருந்தனர்.

இதன் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் மகாநாயக்க தேரர்களிடம் ஐனாதிபதி மீண்டும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post