யாழில் நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனோ தொற்று அடையாளம் - தொற்று 4 அக அதிகரிப்பு - Yarl Voice யாழில் நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனோ தொற்று அடையாளம் - தொற்று 4 அக அதிகரிப்பு - Yarl Voice

யாழில் நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனோ தொற்று அடையாளம் - தொற்று 4 அக அதிகரிப்பு

கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனையில் நான்கு பேர் இதுவரையில்  யாழில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏற்கனவே யாழில் முதலாவது நோயாளி ஒருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்த 3 பேருக்கு தற்போது கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யுhழ் அரியாலையில் சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அந்த மத போதகருடன் சம்மந்தப்பட்டவர்கள் என 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று மாலை ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசொதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 10 பேருக்கு மட்டும் மேற்கொண்ட பரிசோதனைகளில் 3 பேருக்கு கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஏனைய பத்து பேருக்கும் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனோ தொற்று நேற்று இணங்காணப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக பலாலிப் ;பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். அதிலும் இம்மூவரும் குறிப்பிட்ட மத போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.

ஆகவே கொரோனா  தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.  ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்


0/Post a Comment/Comments

Previous Post Next Post