யாழில் இரண்டாவது கொரோனோ நோயாளி அடையாளம் - சுவிஸ் போதகருடன் சம்மந்தப்பட்டவர் - Yarl Voice யாழில் இரண்டாவது கொரோனோ நோயாளி அடையாளம் - சுவிஸ் போதகருடன் சம்மந்தப்பட்டவர் - Yarl Voice

யாழில் இரண்டாவது கொரோனோ நோயாளி அடையாளம் - சுவிஸ் போதகருடன் சம்மந்தப்பட்டவர்

யாழில் இரண்டாவது கொரோனோ தொற்று நோயாளியும் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததாக கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பலாலிலிய் தனிமைப்படுத்தி வைத்திருந்தவர்களில் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொரோனோ சந்தேகத்தில் பலாலியில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் பத்து பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதுpசெயய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இணங்காணப்பட்டவரை மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post