வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - அங்கஜன் தெரிவிப்பு

தனியார் பஸ் சாரதிகள் நடத்துனர்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை முழுவதும் தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 480 ஆசிரியர்கள் கிளிநொச்சியில் 431 ஆசிரியர்கள் முல்லைத்தீவில் 525 ஆசிரியர்கள் மன்னாரில் 454 ஆசிரியர்கள் மற்றும் வவுனியாவில் 310 ஆசிரியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post