யாழில் 34 பேருக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice யாழில் 34 பேருக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice

யாழில் 34 பேருக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனோ தொற்று பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட ஏனைய சுகாதாரப் பிரிவுகள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என 34 பேருக்கு கொரோனோ தொற்று பரிசோதனை யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த – 3 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை - 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர். சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்,  கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 2 பேர். வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர் என மொத்தமாக 34 பேருக்கு இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்து.

0/Post a Comment/Comments

Previous Post Next Post