மிருசுவில் படுகொலை குற்றவாளியின் பொது மன்னிப்பை ஆட்சேபித்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கல் - Yarl Voice மிருசுவில் படுகொலை குற்றவாளியின் பொது மன்னிப்பை ஆட்சேபித்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கல் - Yarl Voice

மிருசுவில் படுகொலை குற்றவாளியின் பொது மன்னிப்பை ஆட்சேபித்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கல்

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 8 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சார்ஜண்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்காவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமையை ஆட்சேபித்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நேற்றுமுன்தினம் காலை சட்டத்தரணி கேசவன் சயந்தன் சாவகச்சேரியில் இருந்துகொண்டே  ந-கடைiபெ மூலம் உயர்நீதிமன்றில் ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்தார்.

மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ட்ரையல் அற் பார் முறையில் விசாரிக்கப்பட்டு பதின்மூன்றுவருடகால நீண்ட சட்டப் போராட்டத்தின்பின் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட குறித்த குற்றவாளி மேன்முறையீட்டின் பின்னரும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரே இரவில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டமையானது  அரசியலமைப்பின் உறுப்புரை- 12 இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமனான பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாகக் குறிப்பிட்டே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றுமுன்தினம் மாலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனும் தன்னை ஒரு மனுதாராகக் குறிப்பிட்டு பொதுநல அக்கறை வழக்காக ஒரு அடிப்படை உரிமைமீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது சிறைக் கைதிகளின் விடுதலை ஒழுங்குகள் பற்றிய விடயங்களைக் கையாண்டவர். அந்தவகையில் இவ்விடயங்களில் ஆழ்ந்த பாண்டித்தியம் பெற்றவர் என்ற முறையில் இவ்விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதனோடு தொடர்பாகஇ மாற்றுக் கொள்கைகளுக்கான மையமும் ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கை நேற்று முற்பகல் தாக்கல் செய்துள்ளது.
இந்த இருவரின் வழக்குகளையும் பாலேந்திரா சட்ட நிறுவனம் மன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post