இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனோ வைரஸ் - 358 பேர் உயிரிழப்பு - பத்தாயிரம் பேர் பாதிப்பு - Yarl Voice இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனோ வைரஸ் - 358 பேர் உயிரிழப்பு - பத்தாயிரம் பேர் பாதிப்பு - Yarl Voice

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனோ வைரஸ் - 358 பேர் உயிரிழப்பு - பத்தாயிரம் பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 10541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும்இ மத்திய அரசு அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் 'ஹெல்ப்லைன்' எண்களை தொடர்பு கொள்ள முடியும் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில் மேலும் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post