யாழில் 500 பேருக்கு மேல் பரிசோதனை - மருத்துவ பீடத்திற்கு சத்தியமூர்த்தி பாராட்டு - Yarl Voice யாழில் 500 பேருக்கு மேல் பரிசோதனை - மருத்துவ பீடத்திற்கு சத்தியமூர்த்தி பாராட்டு - Yarl Voice

யாழில் 500 பேருக்கு மேல் பரிசோதனை - மருத்துவ பீடத்திற்கு சத்தியமூர்த்தி பாராட்டு

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனோ ஆய்வு கூடப் பரிசோதனையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ள அனைவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் கொரோனோ சந்தேகத்தில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் வடக்கு பிரதேசங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ளவர்கள் என பலருக்கும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலேயே கொரோனோ ஆய்வுகூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கமைய 500 பேருக்கு தற்போது இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவபீட பீடாதிபதி உள்ளிட்ட வைத்தியர்கள் மாணவர்கள் என மருத்துவத் துறைசார்ந்த அனைவரும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறொம்.

இதே போன்ற ஆய்வு கூடப் பரிசோதனையை யாழ் போதனாவிலும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக கொரோனோ பரிசொதனையை அதிகளவில் மேற்கொள்ள கூடியதாக இருக்குமென்று கருதுகின்றோம்.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்டும் இந்தப் பரிசோதனைகள் மிகவும் பாதுகாப்பான முறையிலையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே அங்கு பரிசோதனை செய்வதையிட்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. குறிப்பாக அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் எதுவுpத அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.
;

0/Post a Comment/Comments

Previous Post Next Post