யாழ் போதனாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கொரோனோ பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவு சில இடங்களில் தளர்த்தப்பட்டாலும் வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்கள் மீண்டும் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைவதற்கு பல முயற்சிகளை எடுக்கின்றனர்.
குறிப்பாக கணவரைப் பிரிந்து மனைவி பிள்ளைகள் என்றும் தாய் தந்தையரைப் பரிந்து பிள்ளைகள் என்றும் வெளி மாவட்டங்களில் பலர் சிக்கியுள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக தங்கள் தங்கள் குடும்பத்துடன் இணைய முடியாமல் அவர்கள் இருக்கின்றனர். ஆகவே அவர்களை குடும்பங்களுடன் இணைத்து கொள்வதற்கு சுகாதார முறைப்படி ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.
குடுப்பங்களை பல நாட்களாக பிரிந்து இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தைச் சந்தித்து இணைந்த கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அந்த முயற்சியானது சட்ட ரீதியாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் சட்டத்திற்கு முரணானதாக இருக்கக் கூடாது. அவ்வாறாக சட்டவிரோதமாக எடுக்கப்படும் முயற்சிகள் தவிர்க்கப்படுவதுடன் தடுத்து நிறுத்த வேண்டியதும் அவசியம்.
ஆகையினால் குடும்பங்களைப் பிரிந்திருப்பவர்களை மீள இணைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் வெளிமாவட்டங்களில் சிக்சியுள்ளவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள். அதனால் தங்களுக்கு ஏதும் நடந்தாலும் பரவாயில்லை குடும்பத்துடன் இணையவே முயற்சிப்பார்கள்.
இத்தகைய நிலைமையில் அவர்களைக் குடும்பங்களுடன் இணைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேவண்டியது அவசியமானது. அதே நேரம் சட்டவிரோதமான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும். எனவே சுகாதார முறைப்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் அவர்கள் மீளவும் குடும்பங்களுடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
Post a Comment