யாழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றுடன் நிறைவு - Yarl Voice யாழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றுடன் நிறைவு - Yarl Voice

யாழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றுடன் நிறைவு

யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்தி 63 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 808.79 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலா் 5038 குடும்பங்களுக்கு இன்று ஞாயிற்று கிழமை சமுா்த்தி வங்கிகள் ஊடாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளாா்.

இது குறித்து யாழ்.மாவட்ட செயலா் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்..

 யாழ்.மாவட்டத்தில் சமுா்த்தி நிவாரணம் பெறும் 76 ஆயிரத்து 41 குடும்பங்கள் சமுா்த்தி பயனாளிகளாக இணைக்கப்பட வேண்டிய 11 ஆயிரம் குடும்பங்கள் மாவட்டத்திலுள்ள வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட (தினசாி வேலையை இழந்தவா்கள்) 39 ஆயிரத்து 473 குடும்பங்களுக்குமாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 665 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேபோல் மேன்முறையீடு செய்து அரசினால் இறுதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள 5038 குடும்பங்களுக்கான நிதி சமுா்தி வங்கிகளுக்கு அனுப்பபட்டிருக்கின்றது.

இந்த நிதி இன்று ஞாயிற்று கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பினும் சமுா்த்தி உத்தியோகத்தா்களை அணுகி தமது 5 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 23 ஆயிரத்து 433 குடும்பங்களுக்கு இதுவரையில் முதியோா் நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் 8165 மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இன்று வழங்கப்படும் 5038 குடும்பங்களுக்கான நிவாரணத்துடன் யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நிறைவடைகின்றது.

எனவே மொத்தமாக யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் சுமாா் 808.79 மில்லியன் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலா் மேலும் கூறியுள்ளாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post