யாழல் 53 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவரும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழல் 53 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவரும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழல் 53 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவரும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழில் நேற்று 53 பேரின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு நடாத்தப்பட்ட ஆய்வு கூடப் பரிசோதனை முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைததியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு யாழில் கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கமைய கொழும்பில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் என 33 பேர் உள்ளிட்ட 53 பேரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோனை செய்யப்பட்டது.

இப் பரிசோதனையின் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவருமென்று பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post