கொரோனோ தொற்றிலிருந்து வவுனியாவை பாதுகாக்க ஊரடங்கு வேண்டும் - மருத்துவ சங்கம் - Yarl Voice கொரோனோ தொற்றிலிருந்து வவுனியாவை பாதுகாக்க ஊரடங்கு வேண்டும் - மருத்துவ சங்கம் - Yarl Voice

கொரோனோ தொற்றிலிருந்து வவுனியாவை பாதுகாக்க ஊரடங்கு வேண்டும் - மருத்துவ சங்கம்

அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த. காண்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக  வவுனியா  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்  அரச அதிபருடன் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில்,

வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரது இருப்பிடம் அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டத்தை இரண்டு நாட்கள் நீடிப்பது தொடர்பாக நாம் பிராந்திய சுகாதார சேவைகள்   பணிப்பாளர், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தோம்.

 இதுதொடர்பாக சுகாதார அமைச்சிடம் நாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். அங்கிருந்து எமக்கு முடிவுகள் கிடைக்கபெறும் பட்சத்தில் ஊரடங்கு சட்டம் நாளை நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

இது சம்பந்தமாக நாம் எமது தாய்சங்கத்திற்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
இதன்போது அரச அதிபருடன்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதாய் குணவர்த்தன தொடர்பு கொண்டு கேட்ட போது ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனால் ஊரடங்கு உத்தரவு அனுமதி கிடைக்காதவிடத்து வர்த்தக சங்கத்தின் உதவியுடன் வவுனியா நகரினையாவது கடைகள் அனைத்தையும் மூடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம்  கேட்டு கொண்டுள்ளோம் இதற்கு வவுனியா அரச அதிபர் கடைகளை பூட்டுவதற்கு சாதகமான  முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் கடைகளை மூடுவதனால் அது எமக்கு தொடர்பு தடமறிதல் ஊடாக தொற்றுதலுக்குள்ளானவருடன் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்தவும் வவுனியா நகரினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் முடியும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post