யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று - பாதிப்பு 7 ஆக உயர்வு - Yarl Voice யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று - பாதிப்பு 7 ஆக உயர்வு - Yarl Voice

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று - பாதிப்பு 7 ஆக உயர்வு


யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோரோனா வைரஸ் (ஊழஎனை-19) தொற்றால் மேலும் நான்கு பேர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை இரவு  அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

124 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில்  15 > 36 வயதுடைய பெண்கள் பிள்ளைகள் இருவர் மற்றும் 20 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்ரவன் தெரிவித்தார்.

 நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post